ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டுக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரச்சாத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர், வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து, அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பியோடியுள்ள சம்பவம் நேற்று (2) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை பகல் ஒரு மணியளவில் முஸ்லீம் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அங்கு சென்று வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் வாழும் இடம் எனவே பொரும்பான்மை இன கட்சியில் கேட்கை்கூடாது என்று கூறி, கண்டவாறு பேசியதையடுத்து வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியேவந்தபோது அவருக்கும் முஸ்லீம் கட்சி ஒன்றின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
இந்த நிலையில் வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டார். இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த வேட்பாளர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.