பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளம் இதுவரை கிடைக்காத காரணத்தினால் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்காத கம்பெனிகள் வெளியேறுமாறு கோரி இன்று (14) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை தலவாக்கலை நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
இதன்போது பாதைகளில் எழுதிய கோஷங்கள் எழுப்பி தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசாங்கம் 1700 ரூபாய் வழங்க வேண்டும் என அறிவித்த போதிலும் இதுவரை கம்பெனிகள் இதனை வழங்கவில்லை
தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தொழில் செய்த போதிலும் எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கின்ற கம்பெனிகள் உடனடியாக வெளியேறுமாறு தாங்கள் படும் கஷ்டங்கள் தொடர்பாகவும் எவரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை என இம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர் எனவே தமக்கு வழங்க வேண்டிய 1700 ரூபாய் சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்