இரண்டாம் உலகப்போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற எச்.எம்.எஸ்.ஹெர்மஸ் என்ற பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலை இலங்கை கடற்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படைத்தளபதி பிரியந்த பெரேராவும், முன்னாள் கடற்படைத்தளபதி பியல் டீ சில்வாவும் இணைந்து இந்த கப்பலை கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சு தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்த கப்பலை
திருகோணமலை கடற்பரப்பில் சுமார் 55 மீற்றர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எஸ்.ஹெர்மஸ் கப்பலில் பணி புரிந்த பிரித்தானிய கடற்படையினருக்கு தமது அஞ்சலியையும் செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.