இரகசியமான முறையில் நடக்க இருந்த கனியவள ஆய்வு மக்களால் தடுத்து நிறுத்தம்:

இரகசியமான முறையில் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இருந்து தீர்த்த கரைவரை கனியவள ஆய்வு பணியினை மேற்கொள்ள சென்றிருந்த கனிய வள திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு பணி கைவிடப்பட்டது.

மீண்டும் பிறிதொரு இடத்தில் குறித்த திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் கனிய மணல் ஆய்வில் ஈடுபட சென்றபோது அங்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, திணைக்களத்தினருடன் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்தும் குறித்த ஆய்வு நடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்ததுடன் தாம் அவ்விடத்திலிருந்து செல்வதாக கூறி குறித்த ஆய்வு திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கனியமணலை அகழ்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு மாவட்ட. செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே இன்று இன் நடவடிக்கை மேற்கொள்ளமையும், மக்களால் அது தடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *