நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்துவந்த விஜயதாச ராஜபக்ஷ தாம் சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் அறிவித்திருந்த நிலையில் இந்த பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.