தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (16) மொத்த மரக்கறிகளின் விலை மிக உயர்ந்த நிலையில் காணப்படுகிறது.
அதன்படி இன்று 1 கிலோ கரட்டின் விலை 1750 முதல் 2000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
1 கிலோ பீட்ரூட் 650 – 700 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 கிலோ முட்டைக்கோஸ் 500-680 ரூபாய்க்கும், போஞ்சியின் விலை 850-500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கறி மிளகாய் 850 முதல் 1000 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் 450 முதல் 500 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
1 கிலோ பயிற்றங்காய் 350 முதல் 400 வரையிலும், வெண்டிக்காய் 450 முதல் 500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.